Wednesday, 7 October 2015
நாட்குறிப்பில் இருந்து....
வெறுமையாக புரட்டிக்கொண்டிருந்த என் நாட்குறிப்பின் பக்கங்கள் அவளை அந்த நொடி கண்டிருக்காமல் போயிருந்தால் இன்னும் வெறுமையாகவே இருந்திருக்கும்.
உன் ஒரு நொடி வருகை என் பக்கங்களை இன்னும் நிறைத்துக்கொண்டிருக்கிறது, இன்பம், துன்பம், தோல்வி, அழுகை என எதோ ஒன்றை இன்னும் கிறுக்கிக்கொண்டிருக்கிறது.
11/11/10 உன்னுடன் பல நாட்கள் பழகியிருந்தாலும், அன்று மட்டும் ஏனோ என் கண்களுக்கு அழகாக தெரிந்தாய். என்னுள் நீ வர போகிறாய் என் வாழ்வையே மாற்ற போகிறாய் என்று தெரியவில்லை எனக்கு. இருந்தாலும் உன்னை பார்த்துக் கொண்டு இருக்கிறேன் என்னையும் அறியாமல்.
நானும் கவிதை சொன்னேன் உன்னை நினைத்து என்னுள். பொருளும் இல்லை ஒன்றும் இல்லை, ஆனாலும் இதமாக இருந்தது அந்த கவிதை எனக்கு. உன்னை பார்ப்பதற்கு என்றே நீ செல்லும் இடமெல்லாம் எதேச்சையாக வருவது போல் நடித்தேன், உள்ளே பயந்தாலும் ஓர் இனம் புரியாத உணர்வு புதிராகவே இருந்து...
பக்கங்கள் வரும்...
Tuesday, 6 October 2015
மௌனம்...
இன்னும் ஏன்
உன் மௌனம் மட்டும்
பதிலாக தருகிறாய்....
என் மேல் இரக்கப்பட்டு - நீ
தரும் புன்னகை மட்டுமாவது
போதும்,
வாழ்ந்து விடுவேன்
என் நாட்களை...
உன் மௌனம் மட்டும்
பதிலாக தருகிறாய்....
என் மேல் இரக்கப்பட்டு - நீ
தரும் புன்னகை மட்டுமாவது
போதும்,
வாழ்ந்து விடுவேன்
என் நாட்களை...
Monday, 7 July 2014
நாட்கள்...
ஒன்றாக இருந்த
எம் நிழல்கள் - இன்று
பிரிந்து என் நிழல்
மட்டும் போகிறது
என் சாலை வழியே....
அங்கு கொட்டி கிடக்கும்
மலர்கள் கூட
ஏங்குகிறது - உன்
பாதங்கள் பட்டு
மோட்சம் பெற....
நாம் ரசித்த ஒவ்வொரு
காட்சியும் -என்னை
தனிமையில் கண்டதும்
உன்னை பற்றி
என்னிடம் கேட்கின்றன....
நானும் கேட்கின்றன்...
அவளுக்காக என்
ஆயுள் முழுவதும்
காத்திருப்பேன் - அவளை
மீண்டும் என்னிடம்
அனுப்பும் வரை...
என்று அந்த " விதியிடம்"....
Wednesday, 30 April 2014
உன்னை பார்த்த கணம் என் உலகமே நீயானாய்....
Hariharan, Devan, V. Prasanna - Nenjukkul Peidhid…: http://youtu.be/o4wlNJBZduI
Sunday, 21 April 2013
புலம் பெயர் நாடுகளில் தலை தூக்கி நிற்கும் செவ்வாடை பக்தி கலாசாரம் .
இங்கு நான் கூற வருவது புலம்பெயர் மக்களின் வழிபாடு முறை பற்றியே ...
இந்தியாவின் மேல்மருவத்தூரில் சிறிதாக ஆரம்பிக்கப்பட்டு இன்று புலம்பெயர்
தமிழர்கள் மத்தியில்பெரிதாக மதிக்கப்படும் ஒரு இடம் மேல்மருவத்தூர்
ஆதிபராசக்தி .
இதனை அம்மா என்று எல்லோராலும் அழைக்கப்படும் பங்காரு அடிகளார் ஸ்தாபித்து நடத்திவருகிறார். இவரை பராசக்தியின் அவதாரமாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இங்கு நடத்தப்படும் ஒவ்வொரு விழாக்களுக்கும் ஒவ்வொரு அர்த்தங்களும் , பின்னணியும் இருப்பதாக அடிகளார் கூறிவருவார்.இதனை "அருள்வாக்கு " என்று அவரை சார்ந்து இருப்போர் கூறுவார்.
இதற்கு புலம் பெயர் நாடுகளில் மன்றங்கள் வைத்து வாரம் ஒரு முறை ஓன்று
கூடல்களும் , முக்கியமான விழாக்களில் ( மேல்மருவூரில் இடம்பெறும் விழாக்கள்
) செவ்வாடை பக்தர்கள் இணைந்து விழாவை சிறப்பித்து செல்வதும் வழமையானவையே.
சாதரணமாக இருந்துவந்த இந்த வழிபாடு முறைமைகள் காலப்போக்கில் பல மாறுதல்கள் தென்பட்டுள்ளன.இதன் உச்சகட்டம் என்னவென்றால் , தொன்று தொட்டு இருந்து வந்த இந்துக்களின் மரபான ஆலய வழிபாட்டினையே தவறு என்று கூறியும் , மன்ற வழிபாடு மட்டுமே சிறந்தது என்றும் அதன் மூலமே ஆன்மாக்கள் மோட்சம் அடையலாம் என்றும் ஆன்மீக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது, இந்து சமய சித்தர்கள் ,அடியார்கள் எல்லாம் இவ்வாறு இருந்தா முக்தியை பெற்றார்கள் ?. ஒவ்வொரு இந்துவும் தமக்குள்ளே கேட்க்க வேண்டிய கேள்வி இது .
சாதரணமாக இருந்துவந்த இந்த வழிபாடு முறைமைகள் காலப்போக்கில் பல மாறுதல்கள் தென்பட்டுள்ளன.இதன் உச்சகட்டம் என்னவென்றால் , தொன்று தொட்டு இருந்து வந்த இந்துக்களின் மரபான ஆலய வழிபாட்டினையே தவறு என்று கூறியும் , மன்ற வழிபாடு மட்டுமே சிறந்தது என்றும் அதன் மூலமே ஆன்மாக்கள் மோட்சம் அடையலாம் என்றும் ஆன்மீக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது, இந்து சமய சித்தர்கள் ,அடியார்கள் எல்லாம் இவ்வாறு இருந்தா முக்தியை பெற்றார்கள் ?. ஒவ்வொரு இந்துவும் தமக்குள்ளே கேட்க்க வேண்டிய கேள்வி இது .
ஒரு சிலர் ,அக்காலத்தில் மன்ற வழிபாடு இல்லை என்ற ஒரு முட்டாள்தனமான கேள்வியை முன் வைக்கலாம் . ஆனாலும் ஆலய வழிபாட்டை தவறு என்று கூறுவது எவ்வளவு ஒரு மடத்தனமான விடயம் என்று நினைத்து பார்க்க வேண்டும்.
அடுத்த விடயம் என்னவெனில் , இந்துகளின் வீடுகளில் பூஜை அறை எப்பொழுதும்
இருக்கும், அங்கு கடவுளின் படங்களும் பூசை பொருட்களுமே காணப்படும், இது
வழமையே,ஆனால் மேல்மருவத்தூர் மன்றம் செல்லும் சில அடியார்கள் அங்கு
அடிகளாரின் பாததினையும் அவரின் உருவ படங்களையும் கடவுளின் படங்களுக்கு
மேலாக வைத்து அதன் கீழ் இறை உருவங்களை வைத்தும் வழிபடுகின்றனர், அது
அவர்களது தனிப்பட்ட விடயமாயினும் அதனை இன்னும் ஒருவரும் செய்ய வேண்டும்
என்று சொல்வது தவறு. இதனை ஒரு பெருமையான விடயமாக பிறர் மத்தியில் சொல்லி
தம்மை உயர்த்தியும் கட்டிக்கொள்கின்றனர்.
இவ்வளவு காலமும் மருவூர் அடிகளார் என்று மட்டும் வழிபட்டு வந்த இந்த
மன்றங்களில் புதுதாக முளைத்திருக்கும் சொல் "திருக்குடும்பம்" (அடிகளாரும்
அவரது குடும்பமும் ). பெரியவர் , சின்னவர் ( சினிமா தலைப்புகள் மாதிரி இருகிறது என்று ஜோசிக்க
வேணாம் ) மற்றும் அவரது மகள், மற்றும் துணைவியார் (திருமதி அம்மா ). இவ்வாறு ஒரு குடும்பமே சேர்ந்து ஒட்டு மொத்த இந்துக்களையும் முட்டாள்கலாக்கிக்கொண்டு இருக்கிறது என்றால் அது மிகையாகாது . இவர்களுக்காகவும் , இங்கு நடைபெறும் விழாக்களில் பங்கு கொள்ளவும் வருடம்
தோறும் பல்லாயிரகணக்கான புலம் பெயர் மக்கள் அங்கு செல்கிறார்கள் .பல லட்சங்களை செலவு செய்கிறார்கள் , காரணம் ஊழ்வினை குறைய வேண்டுமாம் , ஏன் என்று கேட்டால், இதுவும் அருள்வாக்கில் சொல்லப்பட்டு இருக்கிறதாம் ( கேக்கிறவன் கேனயன்
என்றால் எலி எரோப்லன் ஓடுது என்று சொல்லுவங்கள் போல ) .
நம்பிக்கை தான்
வாழ்க்கையின் அச்சாணி என்றாலும் , மூடநம்பிக்கை அச்சாணி இல்லை என்பதை
புரியாமல் இங்கு பணத்தினை வரி இறைக்கும் மக்கள் இருக்கும் வரை திருக்குடும்பமும் தனது செயல்பாட்டை நிறுத்தப்போவதில்லை.
*எனது இந்த பதிப்பு மேலோட்டமான சில விடயங்களை மட்டுமே சொல்லி இருக்கிறது , இருப்பினும் இது யார் மனதையாவது புண் படுத்தியிருந்தால் தயவு செய்து மனிக்கவும்.
Tuesday, 27 March 2012
- ஒரு மனதின் புலம்பல் -
Friday, 2 September 2011
Monday, 27 June 2011
Thursday, 18 November 2010
Tuesday, 12 October 2010
Friday, 23 July 2010
களவாணி

உரம், விவசாயம், ஊடால காதல்னு அழகான கதையும் அற்புதமான பிரசன்டேஷனுமாக வந்திருக்கிறார் புது இயக்குனர் சற்குணம்!
இதுவரைக்கும் எங்கெங்கேயோ சறுக்குன தயாரிப்பாளர்கள் இனி இவர் பக்கம் மைய(ல்)ம் கொள்ளலாம்.
துபாய்க்கார அப்பாவுக்கு துடுக்கான பிள்ளை விமல். வெட்டி வேலை, வீம்பு சண்டை, சாயங்கால சரக்கு என்று ஊதாரியாக திரிகிறவருக்கு, பக்கத்து கிராமத்திலிருந்து பள்ளிக்கு வரும் ஓவியா மீது காதல். ஆனால் ஓவியாவின் அண்ணனுக்கும் விமலுக்கும் ஜென்ம பகை. சந்தர்ப சூழ்நிலை விமலை மேலும் கெட்டவனாக்க, வெட்டு குத்தாகிறார்கள் வருங்கால மச்சான்கள். இவ்வளவையும் மீறி இணைந்தார்களா ஜோடி என்பது க்ளைமாக்ஸ். ஏ.வெங்டேஷ், பேரரசுகளுக்கு இப்படி ஒரு கதை கிடைத்தால் தியேட்டர் கேண்டீனில் கூட பிளாஸ்திரியும், டெட்டாலும்தான் விற்று தொலைந்திருக்கும். ஆனால் சற்குணத்தின் ட்ரீட்மென்ட்டே தனியாக இருக்கிறது.
LC 112 என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு இவர் எழுதியிருக்கும் புதுக்கவிதை இன்னும் கொஞ்ச நாளைக்கு தஞ்சாவூர் பக்கம் தண்ணீராக ஓடினாலும் ஆச்சர்யமில்லை. ஊர் முழுக்க இதை எழுதி போட்ருவேன் என்று மிரட்டியே ஓவியாவை 'கட்டிக்கிறேன்'னு சொல்ல வைக்கிற விமல், அப்படியே ஒரு நடை ஓவியாவின் அப்பாவிடமே போய் 'மேற்படி ரக நெல்லு இருக்கா' என்று சதாய்ப்பது செம கரைச்சல். காரின் பின் சீட்டில் இருப்பது அப்பா என்பது தெரியாமலே தனது வீர தீர கதையை சொல்லி மாட்டிக் கொள்வதும், ஓவியா நட்டுவிட்டு போன நாலு கொத்து நாற்றை மட்டும் செம்மையாக 'கவனித்து' அதன் வளர்ச்சியில் தன் காதலை வளர்ப்பதுமாக பின்னி எடுத்திருக்கிறார் விமல்.
இதே இந்த கதைக்காகவே பெத்து போட்ட மாதிரி இருக்கிறார் ஓவியாவும். போதையில் தன் கண்ணெதிரிலேயே அத்தை மகளை கடத்திப் போகும் விமலை பார்த்து பேஸ்த் அடித்துப் போய் நிற்கிற காட்சியில் சூடு பிடிக்குது கதை. இளசுகளின் 'கடலைக்கு' இடையூறாக வரும் சிறுவனுக்கு கண்ணை கட்டி கண்ணாமூச்சு ஆட விடுவதெல்லாம் கலகலப்பான காதல் பொதுமறை!
அவ்வப்போது விமல் கோஷ்டியின் அரவையில் சிக்கி 'நொந்தாமிர்தம்' ஆகிறார் கஞ்சா கருப்பு. இவரது காதுபடவே 'பஞ்சாயத்து காலமாகிவிட்டார்' என்று மைக்கில் அறிவிப்பதை கேட்டு திடுக்கிடுகிற போதெல்லாம் கைதட்டல்களால் திடுதிடுக்கிறது தியேட்டரும். அகன்ற கண்களில் ஆச்சர்யம் கோபம் பரிதாபம் என்று ஏகப்பட்ட படங்களை ஓட்டுகிறார் சரண்யா. 'என் புள்ளைக்கு கிரகம் சரியில்ல. ஆவணி வந்தா டாப்புல போய்டுவான்' என்று நம்பிக்கை காட்டுகிறாரே, அற்புதம்! பிள்ளைக்காக துபாயிலிருந்து வாங்கி வந்த லேப் டாப்பை வேஸ்ட்டா போச்சே என்று கோபத்தோடு விற்க முயலும் இளவரசுவிடம், சூழ்நிலை தெரியாமல் விமல் மாடு மேய்க்க போவதை சொல்லி சரண்யா சிலாகிக்கிற காட்சி கலகலப்பு கலவரம்ப்ப்பா
வில்லனாக அறிமுகம் ஆகியிருக்கும் திருமுருகனின் ஓங்கு தாங்கான உடம்பு ஒன்றே போதும். அதையும் மீறி நடிப்பும் வருவதால் புதுமுக வரவில் தனிமுகம் காட்டுவார்.
காட்சிகளுக்கு தோதாக துண்டு துண்டாக எஸ்.எஸ்.குமரன் போட்டிருக்கும் சின்னஞ்சிறு பாடல்களும் பின்னணி இசையும் டாப் என்றால், டம்மா டம்மா பாடல் தனி அட்ராக்ஷன்! விருந்துக்கு பேர் போன தஞ்சையையே தலைவாழை இலையில் வைத்து பரிமாறியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ்.
பாக்யராஜூக்கு பிறகு திரைக்கதையில் சென்ட்டம் அடித்திருக்கிற டைரக்டர் சற்குணத்தை 'மனசை திருடிய களவாணியே' என்று பாராட்டலாம். தப்பேயில்லை!
Sunday, 30 March 2008
உனக்காக....
பூவே
அந்த வானம் உனக்காக
அதில் தவழும் மேகங்கள் உனக்காக
பூக்கள் உனக்காக
அதில் சுரக்கும் தேனும் உனக்காக
அந்த மணல்வெளி உனக்காக
அதில் நான் கட்டிய சிறு வீடுகள் உனக்காக
ஆற்றோர ஆலமர
விழுதுகளில் - நான் கட்டிய
ஊஞ்சலும் உனக்காக
இரவு நேர விண்மீன்கள் உனக்காக
அதை மெத்தையாக்கிடுவேன் உனக்காக
முழு நிலவெடுத்து - அதை
முகம் பார்க்கும்
கண்ணாடியாக்குவேன் உனக்காக
என்னுடல் வெறும் கூடுதான்
அதில் உள்ள கடைசி
மூச்சுக்காற்றும் உனக்காகவே தான்....
அந்த வானம் உனக்காக
அதில் தவழும் மேகங்கள் உனக்காக
பூக்கள் உனக்காக
அதில் சுரக்கும் தேனும் உனக்காக
அந்த மணல்வெளி உனக்காக
அதில் நான் கட்டிய சிறு வீடுகள் உனக்காக
ஆற்றோர ஆலமர
விழுதுகளில் - நான் கட்டிய
ஊஞ்சலும் உனக்காக
இரவு நேர விண்மீன்கள் உனக்காக
அதை மெத்தையாக்கிடுவேன் உனக்காக
முழு நிலவெடுத்து - அதை
முகம் பார்க்கும்
கண்ணாடியாக்குவேன் உனக்காக
என்னுடல் வெறும் கூடுதான்
அதில் உள்ள கடைசி
மூச்சுக்காற்றும் உனக்காகவே தான்....
காத்திருப்பேன்.......
பறவையே
நீ எங்கோ சிறைவைக்கப்பட்டிருக்கிறாய்
உன் அழுகைகள் மட்டும்
கேட்கின்றது எனக்கு - ஆனால்
தேடி வருவதற்கு
ஏதும் தடயங்களில்லை
எம்மை யார் சந்திக்கவைத்தது
எம்மை எது காதல்கொள்ளவைத்தது
இதற்கு காரணமான அந்த
விதியை விட்டுவிட்டு
ஏன் உன்னை சிறையிலிட்டார்கள் ?
கற்சுவர்களுக்குள் அடைபட்டு
பூ போன்ற உன் மேனி
வாடிப்போய்விட்டதா?
பஞ்சு போன்ற உன் பாதங்கள்
பாறையாகிவிட்டதா?
வீணையின் தந்திகளை தடவிய
உன் மெல்லிய விரல்கள்
அந்த சிறைக்கம்பிகளைத் தடவுகின்றதா?
நாம் மனதால் சிறைபட்ட
போதும் வலிக்கவில்லையடி எனக்கு
இன்று உன்னை பிரிந்து
தவிக்கையில் நெருப்பில் இருப்பது போல்
இருக்குதடி எனக்கு
நாம் காதலித்தது
என்ன குற்றமா?
நாம் சேர்ந்து வாழநினைத்தது
என்ன தவறா?
ஏன் இத்தனை துன்பங்கள்
எம்மைச்சுற்றி?
இவை மறையுமன்று
உன் விழி பார்தது
கட்டிக்கொண்டு அழவிருக்கும்
அந்த நொடிக்காக ஏங்குதடி
என் மனம் தனியாக.........
நீ எங்கோ சிறைவைக்கப்பட்டிருக்கிறாய்
உன் அழுகைகள் மட்டும்
கேட்கின்றது எனக்கு - ஆனால்
தேடி வருவதற்கு
ஏதும் தடயங்களில்லை
எம்மை யார் சந்திக்கவைத்தது
எம்மை எது காதல்கொள்ளவைத்தது
இதற்கு காரணமான அந்த
விதியை விட்டுவிட்டு
ஏன் உன்னை சிறையிலிட்டார்கள் ?
கற்சுவர்களுக்குள் அடைபட்டு
பூ போன்ற உன் மேனி
வாடிப்போய்விட்டதா?
பஞ்சு போன்ற உன் பாதங்கள்
பாறையாகிவிட்டதா?
வீணையின் தந்திகளை தடவிய
உன் மெல்லிய விரல்கள்
அந்த சிறைக்கம்பிகளைத் தடவுகின்றதா?
நாம் மனதால் சிறைபட்ட
போதும் வலிக்கவில்லையடி எனக்கு
இன்று உன்னை பிரிந்து
தவிக்கையில் நெருப்பில் இருப்பது போல்
இருக்குதடி எனக்கு
நாம் காதலித்தது
என்ன குற்றமா?
நாம் சேர்ந்து வாழநினைத்தது
என்ன தவறா?
ஏன் இத்தனை துன்பங்கள்
எம்மைச்சுற்றி?
இவை மறையுமன்று
உன் விழி பார்தது
கட்டிக்கொண்டு அழவிருக்கும்
அந்த நொடிக்காக ஏங்குதடி
என் மனம் தனியாக.........
Sunday, 2 March 2008
இனியும் வேண்டாம் ..............
அன்று மாரி கால மாழைப்பொழுது
மழை பெய்து சற்று ஓய்ந்திருந்தது - ஆனால்
இலைகளில் இருந்து விழும்
மழைத்துளிகள் மட்டும் நிற்கவில்லை இன்னும்
வாசலில் நின்றுகொண்டிருந்த என்னை
சில்லென்று உரசிய காற்று - என்
உண்ர்வுகளையும் உரசிவிட்டு சென்றது
அவளுடன் நான் பழகிய அந்த
ஒவ்வொரு நிமிடங்களும் - என்னில்
இன்றும் ஈரமாய் உள்ளது
அவள் என்னுடன் அமர்ந்திருந்நது பேசிய
ஒவ்வொரு வார்த்தைகளும் - என் நினைவில்
இன்னும் உயிருடன் இருக்கின்றது
என்னை ஏக்கத்துடன் பார்க்கும்
அந்த விழிகள் இரண்டும் - என்
விழிகளில் நிழலாய் தெரிகின்றது
எனக்காக மட்டும் உயிர் வாழ்ந்த
அந்த இதயம் - இன்று
என்னை விட்டு விலகியது ஏனோ?
இவ்வுலகை விட்டு உன் உயிர்
போகும் போதாவது - நீ
என்னையும் கூட்டிச்சென்றிருக்கலாமே
Friday, 29 February 2008
விட்டில் பூச்சி
ஓசைகளை மட்டும் தான்
கேட்கின்றேன் - அது வரும்
திசை தெரியாமல்
முட்டி மோதி திரிகின்றேன்
நான் போகும்வழி தெரியாமல்
இரவுகளில் மட்டும் வாழ்கின்றேன்
விடியலைக் காணாத - ஓர்
விட்டில் பூச்சியாக.... --
கேட்கின்றேன் - அது வரும்
திசை தெரியாமல்
முட்டி மோதி திரிகின்றேன்
நான் போகும்வழி தெரியாமல்
இரவுகளில் மட்டும் வாழ்கின்றேன்
விடியலைக் காணாத - ஓர்
விட்டில் பூச்சியாக.... --
Tuesday, 26 February 2008
நினைவுகளில்
நீ என்னோடு பேசிச்சென்ற
ஒவ்வொரு வார்த்தையும்
மனதில் நிலையாய் நிற்கின்றது
நீ என்னோடு வாழ்ந்த
அனைத்து நாட்களும் - என்
வாழ்வில் இனிதாய் இருக்கின்றது
உன் விரல்பட்ட
என் தேகம் - இன்னும்
உனக்காக ஏங்குகின்றது
என்றாவது நீ வருவாய் என
காத்துக்கிடக்கின்றது என் இதயம்
இதமான அந்த நினைவுகளில்........
ஒவ்வொரு வார்த்தையும்
மனதில் நிலையாய் நிற்கின்றது
நீ என்னோடு வாழ்ந்த
அனைத்து நாட்களும் - என்
வாழ்வில் இனிதாய் இருக்கின்றது
உன் விரல்பட்ட
என் தேகம் - இன்னும்
உனக்காக ஏங்குகின்றது
என்றாவது நீ வருவாய் என
காத்துக்கிடக்கின்றது என் இதயம்
இதமான அந்த நினைவுகளில்........
Monday, 25 February 2008
கல்லறைப் பூ
என் விழிகளில் நீ விழுந்ததும்
நான் இன்று பிறந்த குழந்தை
என்றே குதுகலித்தேன்
என் அருகில் நீ வருகையில்
வருடங்கள் அனைத்தும்
நிமிடமென மாறுவதை உணர்ந்தேன்
உன் பாதம் என்மேல்பட்டதும்
புரிந்தது நான் உன்னை
அலங்கரிக்க வந்த பூவல்ல - நானும்
ஓர் கல்லறைப் பூவென.....
நான் இன்று பிறந்த குழந்தை
என்றே குதுகலித்தேன்
என் அருகில் நீ வருகையில்
வருடங்கள் அனைத்தும்
நிமிடமென மாறுவதை உணர்ந்தேன்
உன் பாதம் என்மேல்பட்டதும்
புரிந்தது நான் உன்னை
அலங்கரிக்க வந்த பூவல்ல - நானும்
ஓர் கல்லறைப் பூவென.....
Subscribe to:
Posts (Atom)

