Sunday, 21 April 2013

புலம் பெயர் நாடுகளில் தலை தூக்கி நிற்கும் செவ்வாடை பக்தி கலாசாரம் .

இங்கு நான் கூற வருவது புலம்பெயர் மக்களின் வழிபாடு முறை பற்றியே ...
இந்தியாவின் மேல்மருவத்தூரில் சிறிதாக ஆரம்பிக்கப்பட்டு இன்று புலம்பெயர்  தமிழர்கள் மத்தியில்பெரிதாக மதிக்கப்படும் ஒரு இடம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி . 
இதனை அம்மா என்று எல்லோராலும் அழைக்கப்படும் பங்காரு அடிகளார் ஸ்தாபித்து நடத்திவருகிறார். இவரை பராசக்தியின் அவதாரமாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இங்கு நடத்தப்படும் ஒவ்வொரு விழாக்களுக்கும் ஒவ்வொரு அர்த்தங்களும் , பின்னணியும் இருப்பதாக அடிகளார் கூறிவருவார்.இதனை  "அருள்வாக்கு " என்று அவரை சார்ந்து இருப்போர் கூறுவார்.
இதற்கு புலம் பெயர் நாடுகளில்  மன்றங்கள் வைத்து வாரம் ஒரு முறை ஓன்று கூடல்களும் , முக்கியமான விழாக்களில் ( மேல்மருவூரில் இடம்பெறும் விழாக்கள் ) செவ்வாடை பக்தர்கள் இணைந்து விழாவை சிறப்பித்து செல்வதும் வழமையானவையே.
சாதரணமாக இருந்துவந்த இந்த வழிபாடு முறைமைகள் காலப்போக்கில் பல மாறுதல்கள் தென்பட்டுள்ளன.இதன் உச்சகட்டம் என்னவென்றால் , தொன்று தொட்டு இருந்து வந்த இந்துக்களின் மரபான ஆலய வழிபாட்டினையே தவறு என்று கூறியும் , மன்ற வழிபாடு மட்டுமே சிறந்தது என்றும் அதன் மூலமே ஆன்மாக்கள் மோட்சம் அடையலாம்  என்றும் ஆன்மீக  பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது, இந்து சமய சித்தர்கள் ,அடியார்கள் எல்லாம் இவ்வாறு இருந்தா முக்தியை பெற்றார்கள் ?. ஒவ்வொரு இந்துவும் தமக்குள்ளே கேட்க்க வேண்டிய கேள்வி இது .
ஒரு சிலர் ,அக்காலத்தில் மன்ற வழிபாடு இல்லை என்ற ஒரு முட்டாள்தனமான கேள்வியை முன் வைக்கலாம் . ஆனாலும் ஆலய வழிபாட்டை தவறு என்று கூறுவது எவ்வளவு ஒரு மடத்தனமான விடயம் என்று நினைத்து பார்க்க வேண்டும்.
அடுத்த விடயம் என்னவெனில் , இந்துகளின் வீடுகளில் பூஜை  அறை எப்பொழுதும் இருக்கும், அங்கு கடவுளின் படங்களும் பூசை பொருட்களுமே காணப்படும், இது வழமையே,ஆனால் மேல்மருவத்தூர் மன்றம் செல்லும் சில அடியார்கள் அங்கு அடிகளாரின் பாததினையும் அவரின் உருவ படங்களையும் கடவுளின் படங்களுக்கு மேலாக வைத்து அதன் கீழ் இறை உருவங்களை வைத்தும் வழிபடுகின்றனர், அது அவர்களது தனிப்பட்ட விடயமாயினும் அதனை இன்னும் ஒருவரும் செய்ய வேண்டும் என்று சொல்வது தவறு. இதனை ஒரு பெருமையான விடயமாக பிறர் மத்தியில் சொல்லி தம்மை உயர்த்தியும் கட்டிக்கொள்கின்றனர்.
இவ்வளவு காலமும் மருவூர் அடிகளார் என்று மட்டும் வழிபட்டு வந்த இந்த மன்றங்களில் புதுதாக முளைத்திருக்கும் சொல் "திருக்குடும்பம்" (அடிகளாரும் அவரது குடும்பமும் ). பெரியவர் , சின்னவர் ( சினிமா தலைப்புகள் மாதிரி இருகிறது என்று ஜோசிக்க வேணாம் ) மற்றும் அவரது மகள், மற்றும் துணைவியார் (திருமதி அம்மா ). இவ்வாறு  ஒரு குடும்பமே சேர்ந்து ஒட்டு மொத்த இந்துக்களையும் முட்டாள்கலாக்கிக்கொண்டு இருக்கிறது என்றால் அது மிகையாகாது . இவர்களுக்காகவும் , இங்கு நடைபெறும் விழாக்களில் பங்கு கொள்ளவும் வருடம் தோறும் பல்லாயிரகணக்கான புலம் பெயர் மக்கள் அங்கு செல்கிறார்கள் .பல லட்சங்களை செலவு செய்கிறார்கள் , காரணம் ஊழ்வினை குறைய வேண்டுமாம் , ஏன் என்று கேட்டால், இதுவும் அருள்வாக்கில் சொல்லப்பட்டு இருக்கிறதாம் ( கேக்கிறவன் கேனயன் என்றால் எலி எரோப்லன் ஓடுது என்று சொல்லுவங்கள் போல ) .
 நம்பிக்கை தான் வாழ்க்கையின் அச்சாணி என்றாலும் , மூடநம்பிக்கை அச்சாணி இல்லை என்பதை புரியாமல் இங்கு பணத்தினை வரி இறைக்கும் மக்கள் இருக்கும் வரை திருக்குடும்பமும் தனது செயல்பாட்டை நிறுத்தப்போவதில்லை.

*எனது இந்த பதிப்பு மேலோட்டமான சில விடயங்களை மட்டுமே சொல்லி இருக்கிறது , இருப்பினும் இது யார் மனதையாவது  புண் படுத்தியிருந்தால் தயவு செய்து மனிக்கவும்.